இருசக்கர வாகனத்தை திருடியவரை விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

Author: kavin kumar
15 August 2021, 4:29 pm
Quick Share

தேனி: பெரியகுளம் அருகே இரவு நேரத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கபட்ட இரு சக்கர வாகனத்தை திருடி சென்றவரை ஊர் மக்கள் விரட்டி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் சர்ச் தெருவில் உள்ள மணிகண்டன் என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட அவரது இருசக்கர வாகனத்தை நேற்று இரவில் இளைஞர் ஒருவர் சாவி போட்டு இருசக்கர வாகனத்தை எடுத்து செல்ல முற்பட்ட போது இருசக்கர வாகனத்தின் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து இருசக்கர வாகனத்தை எடுத்து சென்றவர்களை துரத்திய போது ஒரு கட்டத்தில் இரு சக்கர வாகனம் ஓடாமல் நின்று போனதால் வாகனத்தை போட்டு விட்டு பைக் திருடன் ஓடிநான். இந்நிலையில் அப்பொது அப்பகுதி பொதுமக்கள் இளைஞரை விரட்டி சென்ற சுற்றிவளைத்து பிடித்து அப்பகுதியில் உள்ள தெருவிளக்கு கம்பத்தில் கட்டி வைத்தனர்.

இதனை தொடர்ந்து பெரியகுளம் தென்கரை காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தென்கரை காவல்துறையினர் விசரித்தபோது இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர் பெரியகுளம் அருகே உள்ள ஈ.புதுகோட்டை பகுதியை சேர்ந்த முருகன் என்ற இளைஞர் எனபது தெரியவந்தது. மேலும் அவர் பல்வேறு கொள்ளை சம்வங்களில் ஈடுபட்டதகவும், அவர் மீது பய் வழக்குகளிக்கு நிலைவையில் உள்ளது தெரிய வந்த்து. இதனை தொடர்ந்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 201

0

0