தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்: தோட்ட உரிமையாளர் கைது

Author: Udhayakumar Raman
1 July 2021, 3:30 pm
Quick Share

தேனி: பெரியகுளம் அருகே சட்ட விரோதமாக கோவாவிலிருந்து கடத்திவந்து தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, தோட்ட உரிமையாளரை கைது செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள புள்ளகாபட்டி பகுதியில் ரவி என்பவர் தோட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேவதானப்பட்டி காவல்துறையினர் நேரில் சென்று ரவி என்பவரின் தோட்டத்தில் உள்ள சீமை புட்கள் நடுவே 2000த்திற்க்கும் மேற்ப்பட்ட மதுபாட்டில்கள் குவியல் குவியலாக குவிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இட்த்திற்க்கு வந்த தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஸ் மற்றும் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை நேரில் ஆய்வு செய்து,

தோட்ட உரிமையாளர் ரவி என்பவரை கைது செய்தும் மது பாட்டில்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் கோவாவிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த புள்ளகாபட்டி பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் என்பவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் 16 லட்சம் ரூபாய்க்கு மேலுள்ள சுமார் 2 ஆயிரம் மதுபாட்டில்கள் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி காவல்துறையிண்ர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 200

0

0