தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்ற முதியவர் கைது

Author: Udhayakumar Raman
24 July 2021, 3:58 pm
Quick Share

தேனி: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்ற முதியவரை கைது செய்த போலீசார், வெளி மாநில லாட்டாரி சீட்டுகளை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதாக பெரியகுளம் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் உத்தரவின் பேரில் பெரியகுளம் பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் பெரியகுளம் தென்கரை மார்கெட் பகுதியில் சந்தேகிக்கும் படியாக இருந்த தென்கரை இந்திராபுரியை சேர்ந்த முருகன் என்ற 75 வயதுடைய முதியவரை காவல்துறையினர் விசாரணை செய்த போது,

அவரிடம் மறைத்து வைத்திருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா உள்ளிட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் இருப்பதை கண்டு பிடித்தனர். இதனை தொடர்ந்து அவரிடம் இருந்து 50க்கும் மேற்ப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்ததால் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு பெரியகுளம் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து நீதிபதி உத்தரவின் பேரில் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவரை சிறையில் அடைத்தனர்.

Views: - 209

0

0