ஆற்றில் நீரில் மூழ்கிய நிலையில் இளைஞர் சடலம் மீட்பு: கழுத்தை இருக்கிய தடங்கள் இருப்பதால் பல்வேறு கோணங்களில் விசாரணை

5 March 2021, 10:16 pm
Quick Share

தேனி: பெரியகுளம் வராக நதி ஆற்றில் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞர் சடலத்தில் கழுத்தை இருக்கிய தடங்கள் இருப்பதால் கொலையா, தற்கொலையா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை வள்ளுவர் சிலை அருகே வராக நதி ஆற்றில் நீரில் மூழ்கிய நிலையில் இளைஞர்கள் சடலம் கிடப்பதாக பெரியகுளம் தென்கரை காவல்துறையிணறுக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் நீரில் சடலாமாக கிடந்த இளைஞரின் உடலை மீட்டனர். இதனை அடுத்து இளைஞரின் சட்டை பையில் சோதனை செய்த போது அவரின் ஓட்டுனர் உரிமத்தை வைத்து அவர் தேனி மாவட்டம் போடியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பது தெரிய வந்து.

இந்நிலையில் காவல்துறையினரின் சோதனையின் போது, நீரில் மூழ்கிய இளைஞரின் கழுத்து பகுதியில் கயிற்றால் இறுக்கி கழுத்தை நெரித்த தடம் இருந்தாதக காவல்துறையினருக்கு தெரியவந்ததாக கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து இளைஞரின் உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைகாக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் நீரில் மூழ்கி இறந்த நிலையில் இருந்த இளைஞர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டுள்ளாரா என பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 1

0

0