திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலில் சித்திரை திருவிழா நடத்த அனுமதி வேண்டும்.! ஆஸ்டின் எம்.எல்.ஏ கோரிக்கை

16 April 2021, 4:37 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் தோவாளை ஒன்றியத்திற்குட்பட்ட திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலில் சித்திரை திருவிழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு தொகுதி எம்.எல்.ஏ ஆஸ்டின் மனு அளித்தார்.

இரண்டாம் கட்ட கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் குமரி மாவட்டம் தோவாளை திருப்பதிசாரத்தில் உள்ள திருவாழ்மார்பன் கோயிலில் சித்திரைத் திருவிழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் என அங்குள்ள பொதுமக்கள் ஆஸ்டின் எம்.எல்.ஏ-விடம் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து இன்று ஆஸ்டின் எம்.எல்.ஏ குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து திருவாழ்மார்பன் கோவிலில் சித்திரை திருவிழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 31

0

0