பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த நபர்: 10 கிலோ கஞ்சா பறிமுதல்

7 February 2021, 10:08 am
Arrest_UpdateNews360
Quick Share

திருவள்ளூர்: எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியில் ஆந்திராவில் இருந்து தமிழக அரசு பேருந்தில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஆந்திராவை சேர்ந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடியில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட போது, ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து மாதவரம் நோக்கி சென்ற தமிழக அரசுப் பேருந்தில் பயணிகள் போன்று 10கிலோ கஞ்சாவை பையில் மறைத்து கடத்தி வந்த நவீன்கிருஷ்ணா என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், நெல்லூரில் இருந்து கஞ்சாவை தமிழக அரசு பேருந்தில் கடத்திவந்தது தெரியவந்தது.மேலும் கஞ்சா கடத்தல் தொடர்பாக ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை புறநகர் பகுதிகளுக்கு விற்பனைக்காக கஞ்சாவை கடத்தி வரும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.

Views: - 0

0

0