இரு சமூகத்திற்கு இடையிலான பிரச்சினை குறித்து எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த கோரி மனு

Author: Udhayakumar Raman
31 August 2021, 3:49 pm
Quick Share

விருதுநகர்: செங்குளம் கிராமத்தில் இரு சமூகத்திற்கு இடையிலான பிரச்சினை குறித்து எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செங்குளம் கிராமத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பலதரப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் நீண்டகாலமாக தலித் இன மக்கள் தங்கள் தெருவில் இருந்து மெயின் ரோட்டுக்கு செல்வதற்கு நடைமேம்பாலம் கட்டக்கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு சமூகத்தினர் மேம்பாலம் கட்டும் இடத்தை மறித்து கோவில் கட்டுவதாக அரசு புறம்போக்கு வழித்தடத்தில் கட்டிடம் கட்ட முயற்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து கடந்த 2 மாதம் முன்பு அருப்புக்கோட்டை வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடைபாதை அமைத்து தர ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது எனினும் இந்த முயற்சி இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே தங்களுக்கு நடைபாதை மேம்பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு சமுகத்தை சேர்ந்த மக்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினர்.

Views: - 125

0

0