டாஸ்மாக் பார்களை திறக்க கோரி ஆட்சியரிடம் மனு

12 August 2020, 10:22 pm
Quick Share

மதுரை: மதுரை மாவட்ட பார் ஒப்பந்தக்காரர்கள் நலச்சங்கத்தின் சார்பாக டாஸ்மாக் பார்களை திறக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மதுரை மாவட்ட பார் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் கடந்த பல வருடங்களாக முறையாக பார் நடத்தி வருவதாகவும் கடை ஒன்றுக்கு 10 லட்சம் முதல் 6 லட்சம் வரை முதலீடு செய்துள்ளதாகவும், தற்போது கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆறு மாத காலமாக கடை ஒன்றுக்கு 70 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பார் ஊழியர்களுக்கு தங்களால் முடிந்த அளவு இதுவரை நிதி அளித்து வந்துள்ளதாகவும், மதுபான கடைக்கு அட்வான்ஸ் இல்லாத மிகக் குறைந்த வாடகை மட்டும் டாஸ்மாக் நிர்வாகத்தால் வழங்கப்படுவதாகவும்,

இதுவரை பார் திறக்கபடாத காரணத்தாலும் மேலும் இதே நிலைமை நீடித்தால் எங்களால் மேற்கொண்டு கடை வாடகையும் கொடுக்க இயலாது கடைக்கான அட்வான்ஸ் தொகையும் கழிந்து கொண்டு வருகிறது. எனவே வெகுவிரைவில் பார் திறக்க அனுமதி அளிக்கும் பட்சத்தில் அரசு விதித்த அனைத்து சட்ட விதிகளுக்கு உட்பட்டு டாஸ்மாக் பார்களை திறக்க தயாராக உள்ளோம். மேலும் திறக்காத பட்சத்தில் இடத்திற்கான மொத்த வாடகையும் பார் உரிமையாளர்களுக்கு குறைந்தபட்ச நிவாரணத் தொகையாக மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மதுரை மாவட்டம் பார் ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பாக மனு அளித்தனர்.