குமரியில் குடிநீர் கிணற்றில் பெட்ரோல் .!தண்ணீரில் பற்றி எரிந்த தீயால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

27 January 2021, 2:43 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரிமாவட்டம் பனச்சமூடு அருகே பங்கில் இருந்து பெட்ரோல் கசிந்து அருகிலுள்ள குடிநீர் கிணற்றில் பரவியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

குமரி மாவட்டம் பணசமூடு புலியூர் சாலை பகுதியை சேர்ந்தவர் கோபி .இவர் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார் .அவரது வீட்டில் அமைந்துள்ள குடிநீர் கணக்கிலிருந்து தண்ணீர் எடுக்கும் போது தினமும் பெட்ரோல் துர்நாற்றம் வீசியுள்ளது. ஆனால் அதை அவர் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார் .இந்த நிலையில் இன்று அவர் வீட்டு உபயோகத்திற்காக குடிநீர் எடுத்தபோது அதிக அளவில் பெட்ரோல் வாசனை வந்ததையடுத்து போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் சம்பவ வந்த தீயணைப்பு துறையினரும் போலீசார் அங்கிருந்த தண்ணீரை எடுத்து பரிசோதனை செய்து பார்த்தபோது அதில் பெட்ரோல் வாசம் அடித்தது தெரியவந்தது. தொடர்ந்து அதை பற்ற வைத்து பார்த்தபோது மளமளவென தீ பிடித்து எரிந்தது இதனையடுத்து கிணத்தை இரும்புக்கம்பியால் மூடிவிட்டு போலீசார் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது அப்பகுதி மக்கள் அச்சத்துடன் இருந்திருக்கின்றனர்.

Views: - 14

0

0