புதுச்சேரியில் ரூ.103 ஐ தாண்டி விற்பனை செய்யப்படும் பெட்ரோல்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

Author: kavin kumar
16 October 2021, 1:27 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று பெட்ரோல் விலை ரூ.103 ஐ தாண்டி விற்பனை செய்வதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தை விட புதுச்சேரியில் வழக்கமாக பெட்ரோல் டீசல் விலை அதிகபட்சமாக 3 ரூபாய் வரை விலை குறைந்து விற்கப்படும் இதனால் புதுச்சேரி வழியாக செல்லக்கூடிய தமிழக வாகனங்கள் மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்ட வாகனங்கள் புதுச்சேரியில் தான் பெட்ரோல் டீசல் போடுவார்கள். இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இன்று பெட்ரோல் விலை 103க்கும் உயர்ந்து ரூ.103.27 ஆக விற்பனையாகின்றது அதே போன்று டீசல் விலை இன்று 36 பைசா உயர்ந்து ரூ.97.83 ஆக விற்பனையாகின்றது. தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் வாட் வரி 3 சதவீதம் குறைத்தபின்பும் தமிழகத்தை விட அதிகளவாக புதுச்சேரியில் பெட்ரோல் விலை ரூ. 103 ஐ தாண்டியது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் புதுச்சேரி மாநிலத்தின் வரி வருவாய் வெகுவாக பாதிக்கும் நிலை ஏற்படும்.

Views: - 234

0

0