பாமகவின் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் எந்த சாதிகளுக்கும் எதிரானது அல்ல: ஜி.கே.மணி பேட்டி

28 January 2021, 4:57 pm
Quick Share

கிருஷ்ணகிரி: பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நாளை நடைபெற இருக்கும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் எந்த சாதிகளுக்கும் எதிரானது அல்ல என பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்

கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி கே மணி, தமிழகத்தின் வேலைவாய்ப்பு, கல்வி இடஒதுக்கீடு களில் வன்னியர்களுக்கு போதிய இடஒதுக்கீடு வழங்க பட வில்லை. கடந்த 32 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பயன்பெற 32 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதால் வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்கள் பொருளாதார மேம்பாடு அடைய 20 சதவீத தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்பாட்டம் எந்த சமூகத்திற்கும் எதிரானது அல்ல. கட்சியின் பாகுபாடு இன்றி அனைத்து கட்சியின் வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்கள் இதில் கலந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 0

0

0