குழந்தைகளுக்கு நிமோனியா மூளைக்காய்ச்சல் இலவச தடுப்பூசி முகாம்: தொடங்கி வைத்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

Author: Udayaraman
24 July 2021, 8:31 pm
Quick Share

திருப்பூர்: தாராபுரத்தில் குழந்தைகளுக்கு நிமோனியா மூளைக்காய்ச்சல் இலவச தடுப்பூசி முகாமை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார்.

பல்வேறு வைரஸ் நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன அதன்படி குழந்தை பிறந்தவுடன் அல்லது 24 மணி நேரத்துக்குள் முதல் தடுப்பூசி ஆக காச நோய் தடுப்பூசி போடப்படுகிறது. அதைத் தொடர்ந்து மஞ்சள் காமாலை நோய், போலியோ நோய், வயிற்றுப்போக்கு நோய், கக்குவான் நோய், தட்டம்மை நோய் போன்ற பல்வேறு நோய்களுக்கு தடுப்பூசி போடப் படுகின்றன. இதில் பெரும்பாலான தடுப்பூசிகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் லேயே போடப்படுகிறது. ஒருசில தடுப்பூசிகள் மற்றும் தனியார் மருந்துகளில் போடப்படுகிறது. நிமோனியா தடுப்பூசி இதுவரை தனியார் மருத்துவமனைகள் மட்டுமே போடப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க நியூமமோக்கல், கான்ஜுகேட் தடுப்பூசி, பி சிபி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட சர்ச் சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் நியூமமோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி போடும் முகாம் சனிக்கிழமை இன்று தொடங்கியது. இந்த முகாமில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது;- நியூமமோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் ரூ 2500 முதல் 3000 வரை கொடுத்து குழந்தைகளுக்கு செலுத்த வேண்டும்.

ஆனால் தற்போது அரசு மருத்துவமனை துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த தடுப்பூசி இலவசமாக குழந்தைகளுக்கு செலுத்தப்படுகிறது. குழந்தை பிறந்து ஒன்றரை மாதத்தில் முதல் தவணை மூன்றே மாதத்தில் இரண்டாவது தவணை , ஒன்பதாவது மாதத்தின் மூன்றாவது தவணை தடுப்பூசி என மூன்று முறை நியூமமோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி குழந்தைகளுக்கு போடப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார். இதில் ஆரம்ப சுகாதார வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி மற்றும் திமுக நிர்வாகிகள்- குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 304

0

0