தேநீர் அருந்தி கொண்டிருந்தவர்களை தாக்கிய போலீசார்: பள்ளி மாணவன் உட்பட 2 பேர் மருத்துவமனையில் அனுமதி

Author: kavin kumar
16 October 2021, 12:16 am
Quick Share

கோவை: பேக்கரியில் தேநீர் அருந்தி கொண்டிருந்தவர்களை போலீசார் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள பேக்கரியில் சசி கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் தேநீர் அருந்திக்கொண்டு இருந்தபோது, அந்த வழியாக ரோந்து வந்த சிங்கநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கரன் அவர்களை விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சசி கண்ணனும் அவரது நண்பர்களும் வேலை முடிந்து வந்ததாகவும், அருகில்தான் வீடு உள்ளதாகவும், அனைவரும் தினமும் இந்த பேக்கரியில் நண்பர்களுடன் தேநீர் அருந்தி செல்வது வழக்கமானது என்று தெரிவித்துள்ளார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன் சசிகண்ணன் மற்றும் அவருடன் இருந்து பள்ளி மாணவனையும் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் சசிகண்ணனுக்கு காதில் பலமான அடி விழுந்ததால் சிறிது நேரத்தில் வலிதாங்க முடியாமல் அலரி துடித்துள்ளார். இதனால் அருகில் இருந்தவர்கள் சசிகண்ணனை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். கோவையில் அதிகரித்துவரும் கொள்ளை, வழிப்பறி, போதை பொருள் கடத்தல், பயன்பாடு என கோவை மக்கள் அச்சத்தில் இருக்கையில், குற்றவாளிகளை பிடிப்பதற்கு பதில் கடையில் தேநீர் அருந்துபவர்களை கண்மூடிதனமாக போலீசார் தாக்கியது மேலும் மக்களை அச்சப்பட வைத்துள்ளது. இதில் இரவு 11 மணிவரை அளனத்து கடைகளையும் திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 202

0

0