சினிமா பாணியில் காரை துரத்திய போலீஸ்: பேரிகார்டை இடித்து தள்ளிவிட்டு திருட்டு காருடன் தப்பி சென்று திருடன்

23 January 2021, 4:56 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரிமாவட்டம் அஞ்சுகிராமம் அருகே போலீஸ் துரத்தியதால் நள்ளிரவில் சினிமா பட பாணியில் செக்போஸ்ட் பேரிகார்டுகளை இடித்து தள்ளிவிட்டு ,திருட்டு காருடன் தப்பி சென்ற திருடனை பிடிக்க சிசிடிவி கேரமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில் வடசேரியை சேர்ந்தவர் அருணசலம். இவர் நேற்று நள்ளிரவில் சொகுசு கார் ஒன்றை வடசேரி பஸ் நிலையம் அருகில் நிறுத்திவிட்டு, அருகிலிருந்த ஹோட்டலுக்கு உணவு வாங்கச் சென்றிருந்தார். உணவு வாங்கி விட்டு திரும்பி வந்து பார்த்தபோது அவர் நிறுத்திச் சென்ற காரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அருணாச்சலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலின்பேரில் போலீசார் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் செக்போஸ்ட் களுக்கு வேகமாக தகவல் கொடுத்தனர்.மேலும் இரவு ரோந்தில் இருந்த காவல் துறையினரும், சுசீந்திரம் நெடுஞ்சாலை ரோந்து பணியில் இருந்த போலீசாரும் அந்த காரை விரட்டி சென்றுள்ளனர். இதனால் பதற்றமடைந்த திருடன் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து உஷாரான அஞ்சுகிராமம் செக்போஸ்ட்டில் பணியிலிருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு பேரிகார்டுகளை வைத்து சாலையை அடைத்துள்ளனர்.

ஆனால் சினிமா பட பாணியில் அந்தத் திருடன் அங்கு வைக்கப்பட்டிருந்த பேரி கார்டுகளை இடித்து தள்ளி விட்டு வேகமாக சென்றுள்ளார். மேலும் அந்தப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் பெரும் விபத்துகளும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் அஞ்சுகிராமம் போலீசாரும், தனிப்படை போலீசாரும் அருகிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Views: - 0

0

0