காவல் துறையினர் கொடி அணிவகுப்பு மற்றும் விழிப்புணர்வு

Author: Udhayakumar Raman
13 March 2021, 3:54 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2019 ம் ஆண்டு மறு தேர்தல் நடைபெற்ற இடங்களில் காவல் துறையினர் கொடி அணிவகுப்பு மற்றும் விழிப்புணர்வு நடத்தினர்.

தருமபரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2019 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற இடைதேர்தலில் மறு தேர்தல் நடைபெற்ற வாக்கு சாவடிகள் உள்ள கிராமங்களான நத்தமேடு, டி.அய்யம்பட்டி ஆகிய இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவே~;குமார் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாமலை முன்னிலையில்,

அரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ்மணி தலைமையில் மத்திய துணை ராணுவபடையினர், காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. சம்மந்தபட்ட கிராம மக்களிடையே தேர்தல் சம்மந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைத்து மக்களும் எந்தவிதமான அச்சுறுத்தலும் இன்றி தேர்தலில் தங்களது வாக்குகளை பதிவு செய்ய கேட்டுக்கொண்டனர்.

Views: - 46

0

0