குற்றவாளியை கைது செய்ய முயன்ற தனிப்படை போலீஸ் மண்டை உடைப்பு
21 January 2021, 11:33 pmதிருச்சி: திருச்சியில் தேடப்பட்ட வந்த குற்றவாளியை கைது செய்ய முயன்ற தனிப்படை போலீஸ் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் வேல்முருகன் (35). இவர் திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தின் தனிப்படையில் ஏட்டாக ஆக பணியாற்றி வருகிறார். இன்று இரவு 9 மணி அளவில் பணி முடித்து விட்டு ஒரு செந்தண்ணீர்புரம், சென்னை பைபாஸ் சாலை வழியாக விட்டுக்கு சென்றுகொண்டிருந்த பொழுது ஏற்கனவே கொலை மற்றும் பல்வேறு குற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் மற்ற இரண்டு நபருடன் இருசக்கர வாகனத்தில் வருவதைக் கண்டார். உடனடியாக வேல்முருகன் அவர்களை தடுத்து நிறுத்தி அவரை பிடிக்க முயன்றார்.
அப்போது விஜய் பின்னால் இருந்த இரண்டு நபர் திடீரென்று கையில் இருந்த இரும்பு கம்பியால் வேல்முருகனின் தலையில் பலமாக தாக்கி விட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தை தப்பி ஓடினர். ரத்த சொட்ட சொட்ட மயக்க நிலையில் இருந்த வேல்முருகனை செந்தண்ணீர்புரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் அவருக்கு காயம் பட்ட தலையில் தையல் போடப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து பாலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய விஜய் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.
0
0