கஞ்சா விற்பனை செய்த இளைஞர்: கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்…!!

30 November 2020, 5:54 pm
kanja - updatenews360
Quick Share

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சடச்சிவாக்கம் கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக உத்திரமேரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு தீவிர ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்க வந்த காஞ்சிபுரம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ஹரிஷ் என்ற 21 வயது இளைஞரை சந்தேகத்தின் அடிப்பையில் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர்.

அங்கு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் அவர் கஞ்சா விற்பனை செய்ய வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் இருந்த 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த இளைஞரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 0

0

0