காணாமல் போன மொபைல் போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

27 September 2020, 4:16 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 2 ,37,000 மதிப்புடைய மொபைல் போன்கள் கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள் ஒப்படைத்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் மொபைல் போன்களை தவறவிட்டதாகவும் காணாமல் போனதாகவும் புகார்கள் தொடர்ந்து வந்த நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள் அவர்கள் உத்தரவின்படி கணினி வழி குற்றப்பிரிவு மூலம் காணமல் போன மொபைல் போன் imei எண் கொண்டு மொபைல் போன்களை தேடி வந்த நிலையில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட 2 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பிலான விலையுயர்ந்த 16 மொபைல் போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள் ஒப்படைத்தர்.