புழல் மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை:எதுவும் சிக்காததால் ஏமாற்றம்

Author: Udhayakumar Raman
6 August 2021, 5:32 pm
Quick Share

திருவள்ளூர்: சென்னை புழல் மத்திய சிறையில் கஞ்சா செல்போன் உள்ளிட்டவை புழக்கத்தில் இருப்பதாக வந்தப் புகாரின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டதில் எதுவும் சிக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.

சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளிடம் அரசால் தடை செய்யப்பட்டு உள்ள கஞ்சா, குட்கா, பான் மசாலா, போன்ற போதைப் பொருட்களும், செல்போன் ஆகியவை பயன்படுத்தப்படுவதாகவும் வந்த புகாரை தொடர்ந்து மாதவரம் துணை ஆணையர் சுந்தரவதனம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். காலை தொடங்கிய இந்த சோதனை சுமார் 5 மணி நேரம் நடைபெற்றது.

போலீசாரின் திவிர சோதனையில் விசாரணை சிறை எண் 1 மற்றும் தண்டனை சிறை எண் 2 ஆகியவற்றில் எதுவும் கிடைக்காததால் போலீஸார் ஏமாற்றமடைந்தனர்.புழல் காவல் நிலைய போலீஸார் கஞ்சா போதைப் பொருட்கள் செல்போன் போன்றவை சிறையில் புழக்கத்தில் இருப்பதை உரிய முறையில் கண்காணித்து தடுத்திடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 82

0

0