விபத்தில் உயிரிழந்த பெண் தலைமை காவலர் குடும்பத்துக்கு நிதி திரட்டிய காவலர்கள்

Author: Udhayakumar Raman
17 October 2021, 3:53 pm
Quick Share

வேலூர்: விபத்தில் மரணமடைந்த பெண் தலைமை காவலருக்கு 1997 ஆண்டு இரண்டாவது பேட்ச் சேர்ந்த காவலர்கள் நிதி திரட்டி ரூபாய் 12,57,000 குடும்பத்தாரிடம் வழங்கினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி விருதம்பட்டு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் செந்தில்வேலன் இவருடைய மனைவி மாலதி காட்பாடி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் பறக்கும் படையில் (04-04-21) அன்று இரவு ரோந்து செல்லும் போது கார் விபத்தில் சிக்கி தலை குப்புற கவிழ்ந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து தலைமை காவலர் மாலதி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இதனை அறிந்த தமிழகம் முழுவதும் பணி புரியும் 1997 ஆண்டு இரண்டாவது பேச்சை சேர்ந்த 2513 காவலர்கள் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி இன்று காட்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் மாலதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன் 12,57,000 ரூபாய்க்கான காசோலையை மாலதியின் குடும்பத்தாரிடம் வழங்கினார். விபத்தில் உயிரிழந்த பெண் காவலருக்கு சக காவலர்கள் ஒன்றிணைந்து நிதி திரட்டி அவரது குடும்பத்தாரிடம் வழங்கிய நிகழ்ச்சியை அனைவரும் பாராட்டினர்.

Views: - 526

0

0