விவசாயிகள் டெல்லி பயணம் தடுத்து நிறுத்திய போலீசார்: மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

19 April 2021, 2:54 pm
Quick Share

திருச்சி: விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லி பயணத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதையடுத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

50கிலோ DAP உரம் ரூ.1200/-க்கு விலை விற்றது. ஆனால் இன்று ரூ.2000/-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 50கிலோ காம்ளக்ஸ் உரம் ரூ.900/-க்கு விலை விற்றது. இன்று ரூ. 1600/-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 50கிலோ நெல் ரூ.900/-க்கு விலை விற்றது இன்று ரூ.944/- விற்பனை செய்யப்படுகிறது. இந்த ரூ.944/-க்கும் DPC-ல் லஞ்சமாக ரூ.44/- கொடுக்க வேண்டும். 100கிலோ நெல்லுக்கு மத்திய அரசு 2 மடங்கு லாபம் தரும் விலையை கொடுப்பதாக கூறிய தொகை ரூ.5400/-, ஆனால் கொடுப்பதோ ரூ.1888/- மட்டுமே. 24 மணிநேரமும் தடையில்லாத முன்முனை மின்சாரம் தருவதாக கூறிய அரசு 12மணி நேரம் கூட முன்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்க மறுக்கிறது.

இந்த கொடுமையை தட்டி கேட்பதற்கு டெல்லி செல்லலாம் என்றால், சர்வாதிகார நாட்டில் நடப்பது போல காவல்துறை விவசாயிகளை டெல்லி செல்ல அனுமதி மறுப்பதுடன் வீட்டு காவலில் வைத்து விடுகிறார்கள். மேலும், கடந்த 12ம்தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலின் முன்பு உட்கார்ந்து 2 மணி நேரம் போராட்டம் நடத்தி டெல்லி சென்று போராட அனுமதி கோரினோம் திருச்சி மாவட்ட ஆட்சியரும், மாநகர காவல் ஆணையரும் கொரொனா காரணமாக டெல்லி செல்ல வேண்டாம் என்று கூறினார்கள். திருச்சி அண்ணாசிலை அருகில் 15 பேர்கள் மட்டும் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை 10 நாட்களுக்கு அமைதியாக உட்கார்ந்து போராட்டம் நடத்த அனுமதி கேட்டோம் தருகிறேன் என்றார்கள்.

தற்பொழுது அனுமதி கிடையாது என்று கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் மறுத்துவிட்டார்கள். எனவே, காவல்துறை டெல்லி செல்லவிடாமல் தடுத்தால், விவசாயிகள் கழுத்தை அறுத்துக்கொண்டு ரயில் நிலையத்தில் படுத்துக்கொண்டு உரவிலையை குறைக்க சொல்லியும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு விலை கொடுக்க சொல்லியும் இன்று பேரணியாக அண்ணாமலை நகரில் உள்ள தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க அலுவலகத்திலிருந்து திருச்சி ரயில் நிலையம் நோக்கி 50க்கு மேற்பட்டோர் அரை நிர்வாணமாக இலைகளால் உடலை மூடியபடி ஊர்வலமாக செல்ல முற்பட்டனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் கரூர் பைபாஸ் செல்லும் சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர்.

அவர்களிடம் ஸூரங்கம் சரக காவல் துறை உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி பேச்சு வார்த்தை நடத்தினார் .அதனை தொடர்ந்தும் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் அய்யக்கண்ணு உட்பட மறியலில் ஈடுப்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Views: - 34

0

0