காட்பாடியில் இயங்கிய ஆட்டோக்களை தடுத்து நிறுத்திய போலீசார்

15 May 2021, 3:58 pm
Quick Share

வேலூர்: காட்பாடியில் இயங்கிய சுமார் 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் போலீசார் தடுத்து நிறுத்தி இனி ஆட்டோக்கள் இயங்க கூடாது என எச்சரித்து அனுப்பினார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகின்றது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை சில தளர்வுகள் உடன் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதனையடுத்து இன்று முதல் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது முன்னதாக 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து இன்று காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் திருநாவுக்கரசு தலைமையில் போலீசார் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை திடீரென தடுத்து நிறுத்தினர்.

மேலும் தற்பொழுது முதல் இனி ஆட்டோக்கள் இயங்க கூடாது என அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தியும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இச்சம்பவத்தால் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு சூழ்நிலை காணப்பட்டது. மேலும் பேருந்துகள் இயங்காத சூழ்நிலையில் பொதுமக்கள் கடைகளுக்கு அலுவலகத்திற்கு செல்ல ஆட்டோக்களை பெரும்பாலும் நம்பி வந்த சூழ்நிலையில் தற்போது ஆட்டோக்கள் இயக்கக் கூடாது என காவல்துறையின் கெடுபிடியால் பணிக்கு செல்பவர்கள் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 40

0

0