காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்: போராடி காப்பாற்றிய போலீசார்..!!

26 February 2021, 9:30 am
vilupuram1 - updatenews360
Quick Share

விழுப்புரம்: போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் விக்கிரவாண்டி வாணியர் வீதியை சேர்ந்தவர் வரதராஜ் மனைவி சிவகாமி. இவர் நேற்று இரவு 8 மனியளவில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். இந்நிலையில், அவர் திடீரென தான் வைத்திருந்த கேனை திறந்து அதிலிருந்த மண்எண்ணையை தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார்.

இதை சற்றும் எதிர்பாராத அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று சிவகாமியை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். பின்னர் இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில்,

”எனது கணவர் வரதராஜை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பல மணி நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. அவர் தற்போது எந்தவித குற்ற செயலிலும் ஈடுபடாமல் திருந்தி வாழ்கிறார். எனவே அவரை போலீசார் விடுவிக்க வேண்டும் என்று முறையிட்டார்”. இந்த கேட்டறிந்த போலீஸ் அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.

மேலும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இதுபோன்ற அசம்பாவித சம்பவத்தில் ஈடுபடக்கூடாது என்று சிவகாமியை எச்சரித்து அனுப்பி வைத்தனர். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இரவு நேரத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 11

0

0