காவல் படை பட்டாலியனில் பணியாற்றி வந்த காவலர் தூக்கிட்டு தற்கொலை

Author: Udhayakumar Raman
25 September 2021, 6:33 pm
Quick Share

வேலூர்: காவல் படை பட்டாலியனில் பணியாற்றி வந்த காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் எரும்பி கிராமத்தைச் சேர்ந்த நாகரத்தினம் என்பவரது மகன் அஜித்குமார் (வயது 24). கடந்த 2017-ம் ஆண்டு தமிழ்நாடு காவலர் பணியில் சேர்ந்தார். காட்பாடி அருகே உள்ள சேவூர் சிறப்பு காவல்படை 15-வது பட்டாலியனில் பணியாற்றி வந்தார். பட்டாலியன் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் அஜித் குமார் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அஜித்குமார் மற்றும் மற்றொரு காவலர் சீனிவாசன் ஆகியோர் பட்டாலியன் போலீஸ் குடியிருப்பில் உள்ள வீட்டில் படுத்து உறங்கி உள்ளனர். அஜித்குமார் படுக்கை அறையில் படுத்திருந்தார். சீனிவாசன் வெளியே தூங்கினார். இந்த நிலையில் படுக்கை அறையில் அஜித்குமார் துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலையில் கண்விழித்த சீனிவாசன், அஜித்குமார் பிணமாக தொங்குவதை கண்டு இதுகுறித்து பட்டாலியன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

மேலும் திருவலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஜித் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அஜித் குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.இவருக்கு ஒரு அண்ணன் ஒரு சகோதரி உள்ளனர் அவர்கள் சென்னையில் பணியாற்றி வருகின்றனர். மேலும் அவர் தற்கொலை செய்ய காரணம் என்ன என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 276

0

0