காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்த சரண் ராஜ் என்ற காவலர் பணிக்கு சென்ற போது வாகன விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் பகுதியை சேர்ந்தவர் சரண்ராஜ். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்து தற்போது மாகரல் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பணிக்காக உத்திரமேரூரிலிருந்து உள்ள மாகரலுக்கு வந்து கொண்டிருந்தபோது மணல்மேடு அருகே சாலையை கடக்க முயன்ற போது நிலை தடுமாறி சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானர்.சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.விபத்தில் சிக்கி காவலர் உயிரிழந்தால் சக காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சரண்ராஜ் நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று தற்போது இரண்டு வயதில் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
0
0