கஞ்சா கடத்தி கும்பலை பிடிக்க முயன்ற காவலர்: கஞ்சாவை சாலையில் வீசிவிட்டு சென்ற 2 பேர்

9 November 2020, 3:57 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகத்தின் பேரில் தனிப்பிரிவு காவலர் இருசக்கரவாகனத்தை நிறுத்த முயன்ற போது 10 கிலோ கஞ்சாவை சாலையில் வீசிவிட்டு இரண்டுபேர் தப்பி ஓடினர்.

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை தனிப்பிரிவு காவலர் பாபு சந்தேகத்தின்பேரில் நிறுத்த முயன்றபோது இரண்டு பேர் வந்த இருசக்கர வாகனம் நிற்காமல் வேகமாக ஓட்டிச்சென்று ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் வேறு வழியில்லாமல் கஞ்சாவை கீழே போட்டு விட்டு தப்பி ஓடியது. அவர்களை துரத்தித் துரத்தி சென்ற காவலர் பாபு 5 பண்டல்களில் இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

கஞ்சா கடத்தல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிய இருவரையும் கவரைபேட்டைபோலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அதிக அளவில் கஞ்சா கடத்தி வரப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

Views: - 17

0

0