திருச்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

31 January 2021, 2:39 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில்பெற்றோர் தங்களின் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வந்து போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொண்டனர்.

தேசிய பல்ஸ் போலியோ சொட்டுமருந்து வழங்கும் சிறப்பு முகாம் திருச்சி மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி பெரியமிளகுபாறை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் துவங்கியது. இந்நிகழ்ச்சியில் சொட்டு மருந்து மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் பவானி உமாதேவி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராம்.கணேஷ், மாநகராட்சி நகர் நல அலுவலர் யாழினி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்டத்தில் அரம்ப சுகாதார நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில்
5வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மொத்தம் 2,62,642 பேர்களுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுசுகாதாரத்துறை மூலம் அனைத்து பகுதிகளிலும் போலியோ சொட்டு மருந்து போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பெற்றோர் தங்களின் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வந்து போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொண்டனர்.

Views: - 18

0

0