புதுச்சேரியில் இன்று 431 நபர்களுக்கு கொரோனா

3 September 2020, 1:41 pm
Cbe Corona - Updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று 431 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 15588 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த சில நாட்களாக மேலோங்கி உள்ளது. இதனை கட்டுப்படுத்த முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், பாதிப்புகள் கட்டுக்குள் வந்த பாடில்லை. இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி மாநிலத்தில் இன்று 431 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. அதில், புதுச்சேரியில் 389 நபர்களுக்கும், காரைக்காலில் 33 நபர்களுக்கும், ஏனாமில் 5 நபர்களுக்கும், மாஹேவில் 4 நபர்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 5,042 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 10,279 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரியில் 6 நபர்களும், காரைக்காலில் 1 நபரும் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 260 ஆக உயர்ந்துள்ளது. தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 15,588 ஆக உயர்ந்துள்ளது.

Views: - 0

0

0