உ.பி. முதல்வர் பதவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Author: Udayaraman
4 October 2020, 5:45 pm
Quick Share

புதுச்சேரி: ஹத்ராஸில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உ.பி முதல்வர் பதவி விலக வலியுறுத்தி தந்தை பெரியார் திரிவிட கழகம் மகளிர் அணி சார்பில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்

உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் தலித் சிறுமி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு போராடங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தலித் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி பெரியார் திராவிட கழகத்தின் மகளிர் அணி சார்பில் 100 க்கும் மேற்ப்பட்டவர்கள் காமராஜர் சிலை அருகே உ.பி முதல்வர் பதவி விலக வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டதில் ஈடுப்பட்டனர். அப்போது அவர்கள் உ.பி சிறுமியின் உடலை போலிசார் பெற்றோரிடம் ஒப்படைக்காமல் எரித்ததை வெளிகாட்டும் வகையில் விறகு கட்டைகளை அடுக்கி வைத்திருந்தனர்.

இதனை தெடர்ந்து பிரதமர் மோடி மற்றும் உ.பி. முதல்வர் யோகிநாதின் படத்தை எரித்தும் செருப்பால் அடித்தும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது அங்கு வந்த போலிசார் விறகு கட்டைகளை அப்புறப்படுத்தி எரியும் படங்களின் மேல் தண்ணீர் ஊற்றி அனைத்தனர். மேலும் ஆர்ப்பாட்டதில் ஈடுப்பட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும் உ.பி முதல்வர் பதவி விலக வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Views: - 38

0

0