தாயின் நகைகளை திருடி நடக்கமாடிய மகன்: சிசிடிவி காட்சிகளை மூலம் அடையாளம் கண்ட போலீசார்…

25 August 2020, 7:06 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் சொந்த வீட்டில் தாயின் நகைகளை திருடி நடக்கமாடிய மகனை சிசிடிவி காட்சிகளை மூலம் அடையாளம் கண்டு போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி அரியாங்குப்பம் மாதா கோயில் வீதியை சேர்ந்தவர்கள் ராஜேஷ்குமார் சுபாஷினி தம்பதியர்கள். இவர்களுக்கு தமிழ்ச்செல்வன் என்ற மகன் உள்ளார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்செல்வன் தனது வீட்டிற்கு வந்து பூஜையில் கலந்து கொண்டுள்ளார். பின் பூஜை முடிந்தவுடன் தமிழ் செல்வனின் தாய் சுபாஷினி தனது மனைவியை அழைத்துக்கொண்டு ஜாதகம் பார்க்க வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அப்போது பூட்டி இருந்த வீட்டை திறந்து அங்கிருந்த நகைகளை யாரோ மர்ம நபர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக சுபாஷினி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் வீட்டிற்குள் புதிய நபர்கள் நுழைய வாய்ப்பில்லை என்று வீட்டின் எதிரே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர் அப்போது சுபாஷினி வெளியே சென்றிருந்த நேரத்தில் அவரது மகன் தமிழ்செல்வன் வீட்டிற்குள் நுழைந்து சற்று நேரத்தில் வெளியே வரும் காட்சி பதிவாகி இருந்தது. இதனை அடுத்து தமிழ் செல்வனை பிடித்து போலீசார் விசாரித்ததில், கடன் தொல்லை காரணமாக தன் சொந்த வீட்டில் தாம் தான் நகைகளை திருடி அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் புதைத்து வைத்துள்ளதாக ஒப்புகொண்டார். இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் அவர் திருடிய 5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள்,வெள்ளி பொருட்கள் மீட்டு அவர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

Views: - 31

0

0