சட்டக்கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்…

3 September 2020, 3:41 pm
Quick Share

புதுச்சேரி: இறுதியாண்டு மாணவர்களைத் தவிர அனைத்து மாணவர்களுக்கும் உள் மதிப்பீடு அல்லது முந்தைய பருவத் தேர்வுகள் அடிப்படையில் மாணவர்களை தேர்ச்சி செய்ய வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கொரோனா நோய்தொற்று நாளுக்கு நாள் புதுச்சேரியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தேர்வுத்துறை பல்கலைக்கழகத் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டு உள்ளது. இதில் புதுச்சேரி அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் வரும் 12ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட சட்டக் கல்லூரி தேர்வுகளை உடனடியாக ரத்து செய்யக்கோரியும்,

மேலும் இறுதியாண்டு மாணவர்களைத் தவிர அனைத்து மாணவர்களுக்கும் உள் மதிப்பீடு அல்லது முந்தைய பருவத் தேர்வுகள் அடிப்படையில் மாணவர்களை தேர்ச்சி செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் காமராஜர் சிலை அருகோ கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன் முழக்கங்களை எழுப்பினர்.

Views: - 0

0

0