பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோவில் தேர்த் திருவிழா.! பக்தர்கள் புடைசூழ வெகு விமரிசையாக நடந்தது

27 January 2021, 2:14 pm
Quick Share

கன்னியாகுமரி: பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோவில் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குமரிமாவட்டம் பூதப்பாண்டியில் அமைந்துள்ள பூதலிங்கசுவாமி திருக்கோவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலாகும். இக்கோயில் குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பத்து நாள்கள் நடைபெறும் தைத்திருவிழாவில் ஒன்பதாம் நாளான இன்று தேரோட்டம் நடந்தது.

இதில் சிவகாமி அம்மாள் சம்மேதனமாக பூதலிங்க சாமி திரு தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் நான்கு ரதவீதிகள் வழியாக திருதேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றார்கள். இன்று இரவு சுவாமியும் அம்மாளும் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி வலம் நிகழ்ச்சி நடைப்பெறுகிறது.தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Views: - 0

0

0