பெண்களின் படங்களை டவுன்லோடு செய்து பேரம் பேசி வந்த கால்நடை ஆய்வாளர் கைது…

9 August 2020, 6:55 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் பெண்களின் படங்களை டவுன்லோடு செய்து பேரம் பேசி வந்த கால்நடை ஆய்வாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் ஊரடங்கு உத்தர அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ளனர். மேலும் பெரும்பாலான மக்கள் வலைதளத்தை பயன்படுத்தி நாட்களை கடத்தி வருகின்றனர். இதில் சில ஆபாச வலைதள முகவரிக்குள்ளும் சென்று சிலர் அபாச படத்தை பார்த்து வருகின்றனர். சமுக வலை தளங்களை திருச்சி மாநகர சைபர் க்ரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து எச்சரித்து வருகின்றனர். அந்த வகையில் திருச்சியை சேர்ந்த ஒரு நபா் வடமாநில மற்றும் தென்மாநில பெண்களை சப்ளை செய்யும் வலைதள முகவரியில் தொடர்பு கொண்டு அவர்கள் அனுப்பும் சிறு வயதுள்ள பெண்கள் படங்களை டவுன்லோடு செய்து பேரம் பேசி கொண்டிருப்பது தொிய வந்தது.

இதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட செல்போன் எண்ணை சைபர் க்ரைம் போலீசார் டிராக் செய்து சம்மந்தப்பட்ட நபரின் விலாசத்தை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்டையில் இனஸ்பெக்டர் ஆனந்தி வேதவல்லி தலைமையில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருச்சி எடமலைப்பட்டிபுதுாா், ஸ்டேட் பாங்க் காலனியை சோ்ந்த கால்நடை மருத்துவர் அருள்(52) என்பதும், மணப்பாறையில் பூலாம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் கால்நடை மருத்துவ ஆய்வாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இது தொடர்பாக மாநகர ஆணையர் லோகநாதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்மந்தப்பட்ட நபரை கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து அருள் வீட்டிற்கு சென்ற போலீசார் அருளை கைது செய்து வீட்டிலிருந்து லேப்டாப்பை கைப்பற்றினர். மேலும், அதில் இருந்து பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் கைப்பற்றினர். விசாரணையில் டாக்டர் எனக்கூறி வலைதளத்தில் பெண்களின் கேள்விகளுக்கு அருள் பதில் கூறி ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது. இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அருள் நீதிபதி முன் நேர் நிறுத்தப்பட்டனர். பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போலீசார் நெகட்டிவ் என்பதை தெரிய வந்ததையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Views: - 9

0

0