வளர்ப்பு யானைகளுக்கு பருவ மழைக்கு பிந்தைய உடல் எடை பரிசோதனை

17 August 2020, 4:38 pm
Quick Share

நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு பருவ மழைக்கு பிந்தைய உடல் எடை பரிசோதனை செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் கும்கி யானைகள் மற்றும் இரு குட்டி யானைகள் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் பாராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வளர்ப்பு யானைகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உடல் எடை பரிசோதனை செய்வது வழக்கம். யானைகளின் உடல் எடை அளவை பொருத்து நடைப்பயிற்சி, உணவு உள்ளிட்டவைகளில் மாற்றங்கள் செய்யப்படும். மேலும் இந்தாண்டு ஜூன், ஜீலை மாதங்களில் பருவ மழையின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் முதுமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பசுமையாக காட்சி அளிக்கின்றன. இதனால் முகாமில் உள்ள யானைகளுக்கு பசுந்தீவனங்கள் அதிகளவில் கிடைப்பதால் பருவ மழைக்கு பிந்தைய உடல் எடை பரிசோதனை செய்யும் பணி நடைப்பெற்றது. இந்நிலையில் இன்று வளர்ப்பு யானைகளுக்கு தொரப்பள்ளி பகுதியில் உடல் எடை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் முதுமலை வனப்பகுதியில் பசுமையான சூழல் நிலவுவதால் அனைத்து யானைகளுக்கும் உடல் எடை அதிகரித்துள்ளது.

Views: - 31

0

0