முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவுநாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர் : மதுரையில் பரபரப்பு!!

Author: Udhayakumar Raman
1 August 2021, 1:36 pm
Karunaithi Poster - Updatenews360
Quick Share

மதுரை : திமுக தலைவர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தலைவர் கருணாநிதி தனது மகனாகிய ஸ்டாலினிடம் பேசுவதுபோல் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உடல்நிலை குன்றிய நிலையில் இருந்த கலைஞர் தன்னுடைய மகன் ஸ்டாலினை அழைத்து தம்பி ஸ்டாலின்-உடன்பிறப்புகள் யாராவது வந்தால் நான் அண்ணாகிட்ட போகிறேன் என்று சொல்லி விடு என்ற வாசகங்கள் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த போஸ்டர் மதுரை பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலையம், சிம்மக்கல், உள்ளிட்ட மதுரையில் உள்ள முக்கியமான இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

Views: - 112

0

0