ஆறு மாதத்திற்குப் பின் இஸ்லாமிய பெருமக்கள் வழிபாட்டுத் தலங்களில் தொழுகை

4 September 2020, 7:07 pm
Quick Share

நீலகிரி: கொரோனோ ஊரடங்கு தளர்வுகள் தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், ஆறு மாதத்திற்குப் பின் இன்று இஸ்லாமிய பெருமக்கள் வழிபாட்டுத் தலங்களில் சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்தினர்.

மார்ச் 24 முதல் கொரோனா எதிரொலியாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து தொடர்ந்து ஆறு மாத காலமாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. 3 மாத முழு ஊரடங்கு க்குப்பின் பல தளர்வுகளுடன் பொது மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கட்டுப்பாடுகளை தளர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது.

தற்போது ஏழாம் கட்ட ஊரடங்கில் அனைத்து வழிபாட்டு தலங்களும் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளுடன் திறந்து கொள்ளலாம் என அறிவித்ததை அடுத்து பல பகுதிகளில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக கடந்த 6 மாதமாக திறக்கப்படாமல் இருந்த வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டன. இதில் உதகையில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு தொழுகையை வழிபாட்டுத் தலங்களில் நடத்தி வருவர். அந்த வகையில், வழிபாட்டுத்தலங்கள் திறந்த முதல் வெள்ளிக்கிழமையான இன்று இஸ்லாமிய பெருமக்கள் இன்று சமூக இடை வெளியுடனும் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து தொழுகையை நடத்தினர்.

Views: - 0

0

0