அபாயகரமாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார்: இன்னசென்ட் திவ்யா பேட்டி

24 November 2020, 1:31 pm
Quick Share

நீலகிரி: நிவர் புயல் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் அபாயகரமாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையின் படி வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய நிவர் புயல் காரணமாக 24 11 2020 முதல் 27 11 20 வரை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்போது கனமழையும் சூறாவளி காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது காற்று அதிகமாக வீசக் கூடும் என்ற பட்சத்தில் மரங்கள் விழக்கூடிய சூழல் உள்ளதால் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நீலகிரி மாவட்டத்தில் ஆறு வட்டங்களுக்கு உட்பட்ட இடங்களில் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களான 283 பகுதிகளுக்கும் 42 மண்டல குழுக்கள் பிரிக்கப்பட்டு அக்குழுக்கள் 24 மணி நேரமும் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவசர காலங்களில் பொதுமக்கள் தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் மீட்பு மற்றும் நிவாரணம் வழங்க வருவாய்த் துறை காவல் துறை உள்ளாட்சி துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் தயாரான நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடையே கூறினார்.

Views: - 0

0

0