அர்ச்சகர்களுக்கு கோவிலுக்கு சொந்தமான பசு, கன்றுகள் வழங்கல்

4 July 2021, 5:27 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான பசு, கன்றுகளை அர்ச்சகர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி வழங்கினார்.

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும்
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் கோசாலைக்கு பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் காணிக்கையாக பசுமாடுகளின் வழங்கி வருகின்றனர். இவை ஸ்ரீரங்கத்தில் உள்ள கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு காணிக்கையாக வரப் பெற்ற கால்நடைகளில் உபரியாக உள்ள கால்நடைகளை கிராமபுறங்களில்

அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் திருக்கோயிகளில் பணியாற்றி வரும் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு விலையில்லாமல் வழங்கும் நிகழ்ச்சி கம்பரசம்பேட்டை யிலுள்ள கோசாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 34 பயணாளிகளுக்கு ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி 68 பசுவும், கன்றுமாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து , உதவி ஆணையர் கந்தசாமி , உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், ஆய்வாளர் கோகிலவாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Views: - 84

0

0