திண்டுக்கல் பூ சந்தையில் விலை பன்மடங்கு உயர்வு: மல்லிகை ஒரு கிலோ 1,500
Author: kavin kumar19 August 2021, 4:28 pm
திண்டுக்கல்: சுபமுகூர்தம்,ஓணம் பண்டிகை, வரலட்சுமி விரதம், மொகரம் பண்டிகையை ஒட்டி மலர்கள் சந்தையில் பூக்களின் விலை பன் மடங்காக உயர்ந்துள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பூக்கள்சந்தை இயங்கி வருகிறது. சந்தைக்கு திண்டுக்கல், நத்தம், ஆத்தூர், வேடசந்தூர் போன்ற பகுதிகளில் இருந்து அதிக அளவு பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இங்கிருந்து சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலம் போன்ற பகுதிகளுக்கு தினந்தோறும் இங்கிருந்து பூக்கள் அனுப்பப்படுகிறது. கடந்த ஒன்றரை வருடங்களாக வைரஸ் தொற்று காரணமாகவும் எந்தவொரு சுப நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் இல்லாத காரணத்தாலும் பூக்கள் விலை கடுமையான வீழ்ச்சி அடைந்தது.
இந்நிலையில் தற்போது வைரஸ் தொற்று குறைவான காரணத்தால் நாளை சுபமுகூர்த்த நாள் மற்றும் மொகரம் பண்டிகை ,வரலட்சுமி விரதம் அதேபோல் நாளை மறுநாள் சனிக்கிழமை கேரளாவில் ஓணம் பண்டிகை என்பதாலும் தற்போது பூக்களின் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. மல்லிகை ஒரு கிலோ ஆயிரத்து 500 ரூபாய், முல்லைப்பூ 600 ரூபாய் ,கனகாம்பரம் ஆயிரம் ரூபாய், சம்மபங்கி 500 ,கோழிக்கொண்டை 150,அரளிப்பூ 150, செண்டுமல்லி 80, செவ்வந்தி 150 என அனைத்து பூக்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. பூக்கள் விலை உயர்ந்ததால் ஒன்றை வருடம் வறுமையில் இருந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
0
0