மத்திய சிறையில் சிறை கைதி மரணம்: மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு

18 July 2021, 8:42 pm
Quick Share

கோவை: கோவையில் மத்திய சிறையில் உயிரிழந்த சிறை கைதியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 26-ம் தேதி காந்தள் பகுதியில் மகி என்ற பெண்ணை கொலை செய்த வழக்கில் க்யூ பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் முஸ்தபா என்பவர் கைது செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சேகர் என்பவர் நேற்று கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இன்று காலை சேகரின் குடுப்பத்திற்கு காவல்துறையினர் உங்கள் தந்தை உடல்நலம் இன்றி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படதாகவும் உடனே வாருங்கள் என தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனை சென்று பார்த்ததில் அவர் மரணமடைந்து விட்டதாக தெரிவித்ததாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர். இதனால் போலீசார் தாக்கியதில் இறந்ததாக சேகரின் குடும்பத்தினர் சந்தேகம் எழுப்புகின்றனர். சேகர் மரணத்திற்கு உரிய விசாரணை மேற்கொண்டால் மட்டும் உடலை வாங்க போவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 94

0

0