ஊழியரை பணி நீக்கம் செய்த தனியார் கம்பெனி: மனைவியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்

7 November 2020, 9:53 pm
Quick Share

கரூர்: கரூர் அருகே குளித்தலை அரசு மருத்துவமனை முன்பு தனியார் கம்பெனி மூலம் காண்ட்ராக்ட் பணியில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்த நபரை பணிநீக்கம் செய்ததாக மனைவியுடன் அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

சென்னை தலைமையிடமாக கொண்ட சுபித் பெசிலிடீஸ் பிரைவேட் கம்பெனி சார்பில் குளித்தலை அரசு மருத்துவமனையில் 33 நபர்கள் வேலைப்பார்த்து வருகின்றனர். இதில் காண்ட்ராக்ட் பணியில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் கீழே தண்ணீர் பள்ளி பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் வேலையை சரிவர செய்யாததாலும் பணியாளர்களிடம் வேலை வாங்கும் திறமை இல்லை எனவும், இரண்டு முறை மண்டல மேலாளர் உங்களிடம் அறிவுறுத்தியும் நீங்கள் பின்பற்றவில்லை என மருத்துவமனை நிர்வாகத்திற்கும் நீங்கள் செய்கின்ற வேலையில் திருப்தி இல்லை,

அதனால் உங்களை நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுகிறீர்கள் என்ற பணிநீக்க கடிதத்தை வழங்கியதாலும், மேலும் பெண்களுடன் தொடர்பு உள்ளதாகவும், பொய்யான தகவல்களை கூறியதாக சுந்தரம் மற்றும் அவரின் மனைவி குளித்தலை அரசு மருத்துவமனை கேட்டின் முன்புறம் அமர்ந்து போராட்டம் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட தனியார் கம்பெனி மேலாளரிடம் தொடர்புகொண்டு காவல் நிலையத்திற்கு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Views: - 24

0

0