மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய தனி தாசில்தார் கைது…

Author: Udhayakumar Raman
7 September 2021, 11:52 pm
Quick Share

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுக்கா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளியிடம் ரூ.2,000 லஞ்சம் வாங்கிய தனி தாசில்தாரை நாகை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காரைமேடு கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன்(வயது 61) என்பவரின் மனைவி தையல்நாயகி. மாற்று திறனாளி. இவருக்கு மாற்று திறனாளி சான்று வழங்கி உதவி தொகை கோரி தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் பாலமுருகனிடம் விண்ணப்பித்து இருந்தார். அதற்கு ரூ. 2000 லஞ்சம் தர வேண்டும் என்று சமூக பாதுகாப்பு நலத்துறை தனி தாசில்தார் பாலமுருகன் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க மனம் இல்லாததால் இதுகுறித்து நாகை லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் ராமச்சந்திரன் புகார் மனு கொடுத்தார்.

Views: - 142

0

0