தனியார் பள்ளி செயலாளர் கார் கண்ணாடி உடைப்பு: சிசிடிவி வீடியோ வெளியீடு

5 November 2020, 5:17 pm
Quick Share

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் வீட்டின் வாசலில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட தனியார் பள்ளி செயலாளரின் கார் கண்ணாடி உடைப்பு சிசிடிவி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சேர்ந்த பிரபல தொழிலதிபர் காசி முருகன். இவர் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் செயலாளராக உள்ளார். இவர் எஸ்பிகே மேல்நிலைப்பள்ளி சாலையில் உள்ள தனது வீட்டின் முன்பு நேற்று இரவு தனது காரை நிறுத்தியுள்ளார். இன்று காலை வெளியே வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி மர்மநபர்களால் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். காசி முருகன் வீட்டில் பெருந்தப்பட்டு இருந்த சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது அதில் முக கவசம் அணிந்து நபர் கார் கண்ணாடி மீது கல் எறியும் காட்சி பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை கொண்டு
வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Views: - 20

0

0