மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியார் பள்ளி ஆசிரியர் பணி நீக்கம்

Author: Udhayakumar Raman
23 September 2021, 3:52 pm
Quick Share

புதுக்கோட்டை: 11ஆம் வகுப்பு மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்த புதுக்கோட்டை தனியார் பள்ளி ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மறுப்பினிசாலையில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவிக்கு அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சண்முகநாதன் என்பவர் தொலைபேசி மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.புகாரை அடுத்து மாணவியுடன் ஆசிரியர் செல்போனில் பேசிய உரையாடலை வைத்து விசாரணை செய்ததன் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர் ஸ்டெல்லா புஷ்பராணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்ததை அடுத்து தனியார் பள்ளி நிர்வாகம் ஆசிரியர் சண்முகநாதனை பணி நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து மாணவியிடம் பேசிய ஆடியோ பதிவை கொண்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 185

0

0