ஒரு நிமிடத்தில் 26 முறை நிரலம்ப பூர்ண சக்கராசன யோகாசனம் : உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 10 வயது சிறுவன்

Author: Udhayakumar Raman
28 June 2021, 3:33 pm
Quick Share

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் 10 வயது சிறுவன் ஒருநிமிடத்தில் 26 முறை நிரலம்ப பூர்ண சக்கராசன யோகாசனம் செய்து ‛இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்’ மற்றும் ‛ஆவ்சம் உலக சாதனை’ புத்தகத்தில் இடம் பிடித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் பகுதியில் இயங்கி வரும் டி.ஜெ.எஸ்., பப்ளிக் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வரும் மாணவன் ஆர்.ஜி.யுவன், 10 வயது. இவர் ஒரு நிமிடத்தில், 21 முறை நிரலம்ப பூர்ண சக்ராசனம் செய்த ஒரு மாணவியின் யோகா உலக சாதனையை முறியடித்தார். மாணவன் ஆர்.ஜி.யுவன், 26 முறை நிரலம்ப பூர்ண சக்கராசனம் செய்து ‛இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்’ மற்றும் ‛ஆவ்சம் உலக சாதனை’ புத்தகத்தில் இடம் பிடித்து அப்பகுதி மக்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளனர்.

Views: - 104

0

0