மீன்பிடி துறைமுகத்தில் தடைசெய்யப்பட்ட டீசல் விற்பனை: 8ஆயிரம் லிட்டர் டீசல் பறிமுதல்…

Author: Udhayakumar Raman
22 September 2021, 8:22 pm
Quick Share

கன்னியாகுமரி: தேங்காய்பட்டிடம் மீன்பிடி துறைமுகத்தில் விற்பனை செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட 8 ஆயிரம் லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.

குமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான வளங்கள் மற்றும் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். படகுகளுக்கு தேவையான எரிபொருட்கள் சம்பந்தப்பட்டவர்கள் வெளிமார்க்கெட்டில் இருந்து வாங்குவது வழக்கம் .மேலும் சிலருக்கு அரசு மானிய வகையில் எரிபொருள்கள் வழங்கிவருகிறது. வெளி மார்க்கெட்டில் இருந்து வாங்கும் எரிபொருள் விலை அதிகம் என்பதால் சிலர் கலப்பட டீசல் வாங்கி பயன்படுத்துவது வழக்கம் .இதுபோன்ற டீசல் விலை குறைவாக இருப்பதால் பலர் தங்கள் தேவைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர் .

இதை ரகசியமாக விற்பனை செய்வதாக ஏற்கனவே புகார் உள்ளது .இது போன்ற எரிபொருள் விற்பனை செய்ய அரசின் தடையில்லா சான்று வேண்டும் என தெரிகிறது. எனவே அனுமதியில்லாமல் ரகசிய விற்பனை படுஜோராக நடந்து வந்த நிலையில் இன்று தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக வளாகத்தில் டேங்கர் லாரி ஒன்றில் சுமார் 8000 லிட்டர் மிக்சட் மினரல் ஹைடிராகார்பன் ஆயில் எனப்படும் டீசல் ரகசிய விற்பனைக்கு வந்துள்ளதாக புதுக்கடை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று வாகனத்தை சோதனை செய்தபோது அந்த டீசல் கோயம்புத்தூரில் உள்ள ஒரு பிரபல கம்பெனியில் இருந்து கொண்டு வந்தது தெரியவந்தது.
இந்த டீசலை தூத்தூர் கலிங்கராஜபுரத்தை சேர்ந்த சலீம் மகன் சேவியர் (49). விற்பனைக்காக கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட சிஎஸ் பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. உளவுப் பிரிவு ஆய்வாளர் டீசலை பறிமுதல் செய்து சேவியர் மற்றும் அசோக் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Views: - 278

0

0