அடுத்த மாதம் 12ந்தேதி சென்னிமலையில் போராட்டம்: விவசாயிகள் ஆலோசனைக்கூட்டத்தில் அறிவிப்பு

19 January 2021, 6:12 pm
Quick Share

ஈரோடு: பவானிசாகர் அணையிலிருந்து மூன்று மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு செல்லும் கீழ்பவானி பிரதான வாய்க்காலில் ரூ.920 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் கான்கிரீட் திட்டத்தை அரசு கைவிடவேண்டும் என்றும் இல்லாவிடில் அடுத்த மாதம் 12ந்தேதி சென்னிமலையில் போராட்டம் நடத்தப்போவதாகவும் கவுந்தப்பாடியில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனைக்கூட்டத்தில் அறிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து செல்லும் கீழ்பவானி பிரதான பாசன வாய்க்கால் மூலம் ஈரோடு திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனமும் 1 லட்சம் ஏக்கருக்கும் மேல் முறைமுக பாசனமும் பெற்றுவலுவதுடுன் இந்த மூன்று மாவட்டங்களுக்கும் பொதுமக்களின் குடிநீர் ஆதாராமாகவும் திகழ்கிறது. இந்நிலையில் தமிழக அரசு கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க ரூ.920 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளுக்கு ஆணையை பிரப்பித்துள்ளது.

அதனால் ஈரோடு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால் கசிவு நீர் மூலம் பாசனம் பெறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாலைவனம் ஆகும் சூழ்நிலை உள்ளதாகவும், தென்னை, வாழை, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட நீண்ட காலபயிர்கள் பாதிக்கப்படும் எனவும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்றும், இத்திட்டத்தினால் 25 லட்சம் மக்களின் குடிநீர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடும் எனவும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியில் செயல்படும் கீழ்பவானி முறைநீர் பாசன சபையில் கீழ்பவானி பாசன விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிடவேண்டும் பவானிசாகர் அணையில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அப்புறப்படுத்தவேண்டும் என்றும், பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தமிழக அரசு கீ;பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டத்தை கைவிடாவிடில் அடுத்தமாதம் சென்னிமலையில் ஈரோடு, கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கைவிடப்பட்ட திட்டத்தை பொதுப்பணித்துறை இரத்து செய்யும் வரை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0