பஜார் வழியாக பேருந்துகளை இயக்குவதை தடை செய்யக்கோரி கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்பு

19 January 2021, 4:59 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகர் மெயின் பஜார் வழியாக பேருந்துகளை இயக்குவதை தடை செய்யக்கோரி வியாபாரிகள் கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

விருதுநகர் மெயின் பஜாரில் சுமார் 700-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் விருதுநகரை சுற்றியுள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து சில்லரை வியாபாரிகள் காய்கறிகள் பலசரக்கு பொருட்கள் வாங்கி விற்பனை செய்வது வழக்கம். நாளொன்றுக்கு 20,000 மேல் வந்து செல்கின்றனர். விருதுநகர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அருப்புக்கோட்டை, சாத்தூர் வழித்தடங்களில் இயங்கும் பேருந்துகள் மெயின் பஜார் வழியாக இயக்கப்படுகின்றன. இதனால் மெயின் பஜாரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இந்த பகுதிகளில் பேருந்துகளை இயக்க கூடாது என

கடந்த இரண்டு வருடங்களாக வியாபாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தும்,இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மெயின் பஜாரில் கடை வைத்திருக்கும் சுமார் 700 வியாபாரிகள் இன்று ஒருநாள் கருப்பு பேட்ஜ் அணிந்து வியாபாரம் செய்து வருகின்றனர் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக விருதுநகர் திமுக சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் கலந்துகொண்டு பேருந்துகள் இயக்கப்படுவதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது என வியாபாரிகள் இடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

Views: - 0

0

0