திருநங்கைகளுக்கு மளிகை மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்புகள் வழங்கல்

18 May 2021, 8:31 pm
Quick Share

கோவை: கோவையில் ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் இன்றி தவிக்கும் திருநங்கைகளுக்கு அகில பாரத மக்கள் கட்சி சார்பாக அரிசி,மளிகை மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது.

கொரோனா இரண்டாவது அலையை கட்டுபடுத்த மத்திய,மாநில அரசுகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. இதில் நோய் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கால் திருவிழாக்கள்,திருமண நிகழ்ச்சிகள் இல்லாததால் திருநங்கைகள் வாழ்வதாரம் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு உதவும் விதமாக அகில பாரத மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ராமநாதன் தலைமையில், கோவையை அடுத்த வீரபாண்டி பூங்காநகர் பகுதியில் வசிக்கும் சுமார் ஐம்பது திருநங்கைகளுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், உள்ளிட்ட மளிகை மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சியில் அகில பாரத மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் இளந்தென்றல் சிவா, துணை தலைவர் சேகர், மற்றும் நிர்வாகிகள் சதீஷ், சிவா அமுல்ராஜ், நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அகில பாரத மக்கள் கட்சி சார்பாக கோவையில் ஊரடங்கு நேரத்தில் பணிபுரியும் காவல்துறையின் பல்வேறு பிரிவினருக்கும் நேரடியாக சென்று மூலிகை தேநீர், ஜூஸ் போன்றவற்றை வழங்கி வருவதாகவும், இதே போல தமிழகம் முழுவதும் எங்களது கட்சியினர் சமூக பணிகளில் ஈடுபட்டு வருவதாக கட்சியின் நிறுவன தலைவர் ராமநாதன் தெரிவித்தார்.

Views: - 38

0

0