மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கல்

Author: Udayaraman
12 October 2020, 10:57 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையும் நவீன காதொலி கருவியும் சுமார் 37 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பீட்டில் வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட தேர்வுக் குழுவின் சார்பில் தேர்வு செய்து, அவர்களில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் 15 நபர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ 1,000-க்கான உத்தரவும் காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவ மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மூலமாக 5 பயனாளிகளுக்கு காதுக்கு பின்புறம் அணியும் நவீன காதொலி கருவிகள் மதிப்பு தலா ரூ.7500 மதிப்பீட்டில் மொத்தம் ரூ-37,500/-க்கான நல உதவியும் மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் க.சுப்பிரமணி. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரபாகரன் கேட்டல் மற்றும் பேச்சு பயிற்சியாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Views: - 48

0

0